‘எச்ஐவி’ என்றால் என்ன?

‘எச்ஐவி’ என்பது ஒரு வைரஸினதும் அதனால் வரும் நோயினதும் பெயராகும்.

H = மானிடர் – மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

I = நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு _ அது உங்கள் நோய்தடுப்பு ஒழுங்கமைப்பைத் தாக்குகிறது

V = வைரசு _ உங்களுக்கு நோயை ஏற்படுத்தும் கிருமி


எனக்கு ‘எச்ஐவி’ எப்படி வரும்?


ஒருவரைப் பார்த்து அவருக்கு ‘எச்ஐவி’ இருக்கிறதோவென அறிய முடியாது.  அது இருப்பவர்கள்  ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக பலமுறை உணர்வார்கள்.

இரத்தம், பாலுறவு சுரப்புநீர் மற்றும் முலைப்பாலில் ‘எச்ஐவி’ உயிர்வாழும்.  உங்கள் இரத்த ஓட்டத்தில் இவற்றில் எவையாவது புகுந்தால் நீங்கள் ‘எச்ஐவி’யால்பீடிக்கப்படுவீர்கள். ‘எச்ஐவி’ வரக்கூடிய

பொதுவாக வழிகள் பின்வருவனவாகும்:

  • பாலுறவின்போது ஆணுறைகளைப் பாவிக்காமை
  • போதைப்பொருளை உட்செலுத்துவதற்கு மருந்து ஊசிகள், ஊசிகள் மற்றும் கரண்டிகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
  • தொற்றுநீக்காது உடலைத் துளைத்துக்கொள்ளல், பச்சைகுத்திக்கொள்ளல் அல்லது உடலைத் துளைக்கும் நிகழ்ச்சி நடக்கும் வைபவம்
  • முலைப்பால்
  • இரத்தத்துடன் நேரடியான இரத்தக் கலப்பு உ+ம். ‘எச்ஐவி’க்கான பரிசோதனை செய்யாத நாடுகளில் இரத்தம் ஏற்றிக்கொள்ளல், உறுப்பு மாற்றம்.  எல்லா விதிகளையும் பின்பற்றும்போது, அவுஸ்திரேலியாவில் இரத்தம் ஏற்றுதல் மற்றும் உறுப்பு மாற்றல் ஆகியன பாதுகாப்பானது.

பின்வருவனவற்றால் உங்களுக்கு ‘எச்ஐவி’ வராது:

  • கட்டியணைத்தல்
  • இருமுதல் அல்லது தும்முதல்
  • உணவு அல்லது பானத்தைப் பகிர்தல்
  • ‘எச்ஐவி’யுள்ள ஒருவரால் சமைக்கப்பட்ட உணவை அருந்துதல்
  • அவுஸ்திரேலியாவில் இரத்தம் ஏற்றிக்கொள்ளல் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • ‘எச்ஐவி’ உள்ள ஒருவர் பாவிக்கும் அதே கழிப்பறை அல்லது குளியலறையைப் பாவித்தல்
  • பூச்சி அல்லது மிருகக் கடிகள்
  • ‘எச்ஐவி’ உள்ளவர்களுடன் ஒவ்வொருநாளும் தொடர்புகொள்ளுதல்
  • நீச்சல் தடாகம் அல்லது உடற்பயிற்சிக்கூடம்

உடலுக்கு ‘எச்ஐவி’ எதனை உண்டுபண்ணுகிறது?


உங்கள் நோய் எதிர்ப்பு செயல்முறையை ‘எச்ஐவி’ தாக்குகிறது.  நீங்கள் நோய்வாய்ப்படுவதிலிருந்து உங்களை உங்களது நோயெதிர்ப்பு சக்தி  கிருமிகளுடன் போராடி உங்களைப் பாதுகாக்கிறது.  உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பை ‘எச்ஐவி’ பலஹீனப்படுத்துகிறது, ஆகவே அதனால் உங்களைப் பாதுகாக்க முடியாது. ‘எச்ஐவி’ மருந்தினை நீங்கள் உட்கொள்ளவில்லையானால், நீங்கள் மிகவும் நோய்வாய்ப்படலாம்.

‘எச்ஐவி’யும். ‘எயிட்ஸ்’ உம் ஒரே விடயமா?


இல்லை.

உடலிலுள்ள நோயெதிர்ப்புக் கலன்களைக் கொல்லும் ஒரு வைரசுதான் ‘எச்ஐவி’ ஆகும்.

‘எயிட்ஸ்’ ஒரு வைரசு இல்லை.

உங்களது நோயெதிர்ப்பு செயல்முறை மிகவும் பலஹீனமாக இருக்கும்போது உடலைத் தாக்கும் அரிதான நோய் அல்லது வருத்தம்தான் ‘எயிட்ஸ்’ ஆகும். உங்கள் நோயெதிர்ப்புக் கலன்களில் பெரும்பான்மையானவற்றை ‘எச்ஐவி’ கொன்ற பின்னர் மட்டும்தான் இது ஏற்படுகிறது. இதற்குப் பல ஆண்டுகள் எடுக்கலாம்.

மருந்துகள் அதனைத் தடுப்பதால் அவுஸ்திரேலியாவில் ‘எயிட்ஸ்’ மிக அரிதாகும்.

‘எச்ஐவி’  இருப்பதால் அவுஸ்திரேலியாவில் நீங்கள் ‘எயிட்ஸ்’- ஆல் இறப்பீர்களெனப் பொருள் கொள்ள முடியாது.

எனக்கு ‘எச்ஐவி’ உள்ளதாவென எப்படித் தெரிந்துகொள்வது?


இரத்தப்பரிசோதனையொன்றைச் செய்வதுதான் ‘எச்ஐவி’ உங்களுக்கு உண்டா என்பதனைத்  தெரிந்துகொள்வதற்கான ஒரே வழியாகும்.

  • இந்தப் பரிசோதனை ‘எதிர்மறை’யானால், உங்களுக்கு ‘எச்ஐவி’ இல்லை
  • இந்தப் பரிசோதனை ‘நேர்மறையானால், உங்களுக்கு ‘எச்ஐவி’ உண்டு

பலர் தாம் சுகமாக இருப்பதாக உணர்வதால், தங்களுக்கு ‘எச்ஐவி’ இருப்பதனை அறியமாட்டார்கள்.  ஆனால், முதலில் ‘எச்ஐவி’ உங்களுக்கு வரும்போது உங்களுக்கு ஒருவேளை பின்வருவன ஏற்படலாம்:

  • தலைவலி
  • காய்ச்சல்
  • களைப்பு
  • சுரப்பிகள் வீக்கம்
  • தொண்டைக் கரகரப்பு
  • சொறி
  • தசை, மூட்டு வலி
  • வாய்ப்புண்
  • பிறப்புறுப்பில் புண் ஏற்படல்
  • இரவில் வியர்த்தல்
  • வயிற்றோட்டம்

ஆனால் இவை காய்ச்சல், குளிர் ஜுரம் அல்லது வேறு வருத்தங்களாலும் ஏற்படலாம், ‘எச்ஐவி’ உங்களுக்குப் பீடித்திருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒரு வைத்தியரைச் சந்தித்து பரிசோதிக்கும்படி கேட்கவேண்டும்.

எனக்கு ‘எச்ஐவி’ நேர்மறையானால் நான் என்ன செய்ய வேண்டும்?


ஒரு வைத்தியருடன் பேசுவதுதான் முதலில் செய்யவேண்டியது.  உங்களுக்குத் தேவைப்படின் ஒரு உளநல ஆலோசகர் போன்ற ஒருவருடன் நீங்கள் பேசுவதற்காக அவர்கள் ஒழுங்குசெய்யலாம்,  ‘எச்ஐவி’ மருந்துகளை வைத்தியர் உங்களுக்குத் தருவார்.  இந்த மருந்துகள் நீங்கள் ஒரு நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும்.

எச்ஐவி’க்கு சிகிச்சையுண்டா அல்லது குணப்படுத்தமுடியுமா?


‘எச்ஐவி’ குணப்படுத்த முடியாதது ஆனால், மருந்துகளைக் கொண்டு இதற்குச்  சிகிச்சையளிக்கலாம்.

பூதக்கண்ணாடியால் கூடப் பார்க்கமுடியாத அளவிற்குக்  குருதியிலுள்ள வைரசுக்களின் தொகையை மருந்து குறைக்கிறது.  ‘கண்டுபிடிக்க முடியாத வைரசு தொகை’ என நாம் குறிப்பிடும் இதன் அர்த்தம் ‘எச்ஐவி’யால் நீங்கள் நோய்வாய்ப்பட மாட்டீர்கள் மற்றும் நீங்கள் சாதாரண வாழ்க்கைக் காலத்தைக் கொண்டிருப்பீர்கள் என்பதாகும்.  நீங்கள் மருந்தைச் சரியாகத் தொடர்ந்தும் எடுத்துவருவீர்களானால், வேறொருவருக்கும் ‘எச்ஐவி’யை நீங்கள் கொடுக்கமாட்டீர்கள் என்பதும் இதன் அர்த்தமாகும்.

‘எச்ஐவி’ யால் பீடிக்கப்படுவதிலிருந்து என்னை எவ்வாறு நான் பாதுகாக்கமுடியும்?


  • உங்களுக்கோ அல்லது உங்கள் பாலுறவுப் பங்காளிக்கோ ‘எச்ஐவி’ இருக்கிறதாவென சோதனைசெய்வித்துத் தெரிந்துகொள்ளுங்கள்: ஒருவரைக் காட்டிலும் கூடுதலான பங்காளிகள் இருந்தால் ( அல்லது உங்கள் பங்காளி வேறொருவருடன் பாலுறவு கொண்டிருந்தால்), அவ்வப்போது தவறாமல் பரிசோதித்துக் கொள்ளவும்.  பெருமளவு பாலுறவுப் பங்காளிகளை நீங்கள் வைத்திருந்தால், ‘எச்ஐவி’யால் நீங்கள் பீடிக்கப்படுவதற்கான அபாயம் அதிகளவில் உண்டு.
  • ஆணுறைகளைப் பாவியுங்கள்
  • பாலுறவால் பரவும் தொற்றுக்களுக்காகப்(‘எஸ்டிஐ’- கள்) பரிசோதித்து சிகிச்சை பெறவும்.  உங்களுக்கு ‘எஸ்டிஐ’ இருப்பது, நீங்கள்எச்ஐவி’ யால் பீடிக்கப்படவும், அதனை வேறொருவருக்குத் தருவதற்குமான அபாயத்தை  அதிகரிக்கிறது. ‘எஸ்டிஐ’- களுக்குமான  பரிசோதனை, சிகிச்சையைச் செய்துகொள்ளுமாறு உங்கள் பங்காளிகளைக் கேளுங்கள்.
  • வெளிப்படையாக நோய் வரும் முன்னர் நோயைத் தடுப்பது பற்றி உங்கள் வைத்தியரிடம் கேளுங்கள் (PrEP). உங்களுக்குஎச்ஐவி’ வராமல்   தடுக்கும் மருந்துதான் ‘PrEP’ ஆகும்.  இது ‘எச்ஐவி’ இல்லாதவர்களாயினும், அதனால் பீடிக்கப்படக்கூடிய அதிக அபாயம் உள்ளவர்களுக்கானதாகும்.

 

‘அதிக அபாயம்’ என்பது:

  • ‘எச்ஐவி’ உள்ளவரைப் பங்காளியாக வைத்திருப்பவர்
  • ஒன்றிலும் கூடுதலான பாலுறவுப் பங்காளிகளை வைத்திருக்கும் ஆட்கள்
  • ஏனைய ஆண்களுடன் பாலுறவு கொள்ளும் ஒரு மனிதர்
  • ஒவ்வொரு தடவையும் ஆணுறை போட்டுக்கொள்ளாதோர்
  • போதை மருந்தை ஏற்றிக்கொள்வதற்கான மருந்தூசிகள், ஊசிகள், நீர் மற்றும் கரண்டிகளைப் பகிர்ந்துகொள்வோர்.

 

  • தொற்றுநீக்கப்பட்ட (துப்புரவான) போதை மருந்தை ஏற்றும் உபகரணத்தையும், நீரையும் மாத்திரம் பாவிக்கவும்: ஏனையோருடன் உபகரணங்களைப் பகிர வேண்டாம். மருந்தேற்றும் ஊசியில் பார்வையில் படாத அளவிற்குச் சிறியதாக இருக்கும் இரத்தத் துளியிலிருந்தும் கூட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ‘எச்ஐவி’ கடத்தப்படலாம்.
  • பச்சைகுத்துதல் மற்றும் உடலைத் துளைத்தல்:  ஊசிகளும் ஏனைய உபகரணங்களும், சரியானமுறையில் சுத்தம் செய்யப்படும் அல்லது பாவனையின் பின்னர் வீசப்படும் அனுமதி பெற்ற கலைக்கூடத்தை மாத்திரம் உபயோகியுங்கள். உங்களுக்காகப் புதிய மைப்பூச்சு பாவிக்கப்படுவதை நிச்சயப்படுத்துங்கள்.
  • இரத்தம் ஏற்றுதல் மற்றும் ஏனைய மருத்துவ நடவடிக்கைகள்: அவுஸ்திரேலியாவில்  இரத்தம், இரத்த  பொருட்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் எல்லாம் பரிசோதிக்கப்படுகின்றன மற்றும் அவை பாதுகாப்பானவையாகும்.  ஆனால் ஏனைய நாடுகளில், இரத்தம் ஏற்றுதல், இரத்தப்பொருட்கள் மற்றும் உடலுறுப்புக்கள் பாதுகாப்பற்றவையாக இருக்கலாம்.

வேறு ஒருவருக்கு ‘எச்ஐவி’ யை நான் தரமாட்டேனென எவ்வாறு நான் உறுதிப்படுத்துவது?


  • ‘எச்ஐவி’ மருந்தை எடுப்பது குறித்து உங்கள் வைத்தியருடன் கலந்துரையாடுங்கள்: இரத்தத்திலுள்ள வைரசுக்களின் தொகையை ‘எச்ஐவி’ மருந்து மிகவும் குறைக்கிறது.  வைரசுக்களின் தொகை மிகவும் குறையும்போது, ‘எச்ஐவி’யை நீங்கள் இன்னொருவருக்குத் தர முடியாது.  ‘தடுப்புச் சிகிச்சை’ (TasP)யென இது அழைக்கப்படுகிறது.
  • அவ்வப்போது தவறாமல் பரிசோதித்துக் கொள்ளுங்கள்: ‘எச்ஐவி’ மருந்தை நீங்கள் எடுத்தாலும், தவறாமல் நீங்கள் கட்டாயமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  பல்வேறுபட்ட ‘எச்ஐவி’ வைரசுக்கள் உண்டு மற்றும் ஒரே நேரத்தில் ஒரே வகையான ‘எச்ஐவி’- யிலும் பார்க்க அதிக வகைப்பட்ட ‘எச்ஐவி’ இருப்பதற்கு வாய்ப்புண்டு. இவ்வாறு ஏற்பட்டால், மருந்தை மாற்றவேண்டிய தேவை ஏற்படலாம்.
  • ‘எஸ்டி’ஐ களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்: நீங்கள் ‘எஸ்டிஐ’- களைப் பெறுவதை ‘எச்ஐவி’ மருந்து தடுக்காது.  உங்களுக்கு ‘எஸ்டிஐ’ க்கள் இருந்தால் ‘எச்ஐவி’ உங்களுக்கு வருவது(நோய்வாய்ப்பட) சுலபமாகும். ‘எஸ்டிஐ’ -களுக்கான சோதனைகளை நீங்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் மற்றும் சோதனை பலாபலன் ‘நேர்மறை’ யானால் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் பாலுறவு பங்காளி(கள்) பரிசோதிக்கப்படவும், சிகிச்சையளிக்கப்படவும் வேண்டும்.
  • ஆணுறைகளைப் பாவியுங்கள்: நீங்கள் பாலுறவு கொள்ளும் ஒவ்வொரு தடவையும் ஒரு ஆணுறையைப் பாவியுங்கள்
  • போதைப்பொருளை ஏற்றுவதற்காக மருந்தூசிகள், ஊசிகள்,கரண்டிகளைப் பகிர வேண்டாம்
  • முலைப்பால்: நீங்கள் ‘எச்ஐவி’ மருந்து எடுத்துக்கொண்டு குழந்தைக்கும் பாலூட்டவேண்டுமானால், உங்கள் ‘எச்ஐவி’ வைத்தியருடன் பேசுங்கள்.

எனக்கு ‘எச்ஐவி’ இருந்தால் அதை யாருக்காவது நான் சொல்ல வேண்டுமா?


சட்டத்தின் பிரகாரம் நீங்கள் கீழ்க் குறிப்பிட்டோருக்குச் சொல்லவேண்டும்:

  • உங்கள் பாலுறவுப் பங்காளி அல்லது பங்காளிகள்.  அவுஸ்திரேலியாவில் சில மாநிலங்களில், அவர்களுடன் பாலுறவு கொள்ளும் முன்னர் நீங்கள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  ஒவ்வொரு மாநிலமும் வேறுபட்டது ஆதலால் நீங்கள் அங்கே பயணிக்கும் முன்னர் அந்த தகவலை அறிந்து கொள்ளுங்கள்.
  • அவுஸ்திரேலிய இராணுவப் படை. உக்களுக்கு ‘எச்ஐவி’ இருந்தால் நீங்கள் அதில் சேர முடியாது.
  • நீங்கள் ஒரு விமான ஓட்டியானால்
  • உடல்நல அல்லது பிரயாண காப்புறுதி போன்ற காப்புறுதி வகைகளை நீங்கள் வாங்குவதானால்
  • இரத்தம் அல்லது சிறு நீரகம் போன்ற உடலுறுப்பைக் கொடுப்பதானால்.  உங்களுக்கு எச்ஐவி இருக்குமானால் இரத்தத்தையோ அல்லது உறுப்பையோ கொடுக்கமுடியாது.

நீங்கள் பின்வருவோருக்குச் சொல்ல வேண்டியதில்லை:

  • உங்கள் முதலாளி
  • சக தொழிலாளர்கள்
  • அறையைப் பகிர்பவகள்
  • குடும்பம்
  • நிலப்பிரபு
  • ஆசிரியர்
  • சக மாணவர்கள்
  • நண்பர்கள்

நீங்கள் பின்வருவோருக்குச் சொல்லவேண்டும்:

  • உங்கள் வைத்தியர்.  அவர்கள் உங்களைப் பரிசோதித்தும், மருந்து கொடுத்தும் உதவுவார்கள்

உங்கள் ‘எச்ஐவி’ பராமரிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஆலோசகர்கள் அல்லது வேறு ஆட்கள், இதனால் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

உதவியையும் ஆலோசனையையும் எங்கே நான் பெற முடியும்?


உங்களுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்கக்கூடிய பல ‘எச்ஐவி’ சமூகக் குழுக்கள் அவுஸ்திரேலியாவில் உண்டு.

ຂໍ້ມູນເພີ່ມເຕີມ