‘ஈரல் அழற்சி ‘சி’’ என்பது என்ன?
உங்கள் ஈரலுக்கு நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் கிருமிதான் ‘ஈரல் அழற்சி ‘சி’’ என்பதாகும். அதிகளவு மதுவை அருந்துதல் இதனை உண்டுபண்ணுகிறது; அதே போல், போதைவஸ்து பாவனை, சில இரசாயனப்பொருட்கள் மற்றும் ஏனைய சில வைரஸுக்களும் ஈரலைப் பாதிக்கும்.
உங்கள் நல்வாழ்வுக்கு உங்கள் ஈரல் மிகவும் அவசியமாகும். ஈரல் பாதிக்கப்படும்போதோ அல்லது சேதமடைந்தாலோ அது நன்கு வேலை செய்ய முடியாமல் போகலாம் என்பதுடன் உங்களை மிகவும் நோயாளியாகவும் ஆக்கக்கூடும்.
‘ஈரல் அழற்சி ‘சி’’ சிலவேளைகளில் ‘ஹெப் ‘சி” என அழைக்கப்படுகிறது
‘ஈரல் அழற்சி ‘சி’’ எவ்வாறு எனக்கு ஏற்படும்?
‘ஈரல் அழற்சி ‘சி’’ கிருமி உள்ள ஒருவரின் இரத்தம் உங்களுடைய இரத்த ஓட்டத்திற்குள் புகுந்தால் உங்களுக்கும் ‘ஈரல் அழற்சி ‘சி’’ வரலாம். இரத்தத் துளிகள் பார்க்க இயலாத அளவிற்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலும், நீங்கள் ‘ஈரல் அழற்சி ‘சி’’ யால் பீடிக்கப்படலாம்.
மிக அபாயகரமான நடவடிக்கைகள்
- ‘ஈரல் அழற்சி ‘சி’ நோயை ஏனையோர் பெறுவதற்கான மிகப் பொதுவான வழி, போதைவஸ்துவை ஏற்றுவதற்காக ஊசிகள், உட்புகுத்துவதற்கான கருவிகள் மற்றும் தேநீர்க்கரண்டிகளைப் பகிர்ந்துகொள்ளுதலாகும்.
- கிருமிநீக்கம் செய்யப்படாமல் பச்சைகுத்திக் கொள்ளுதல் (tattooing), உடல் துளைகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் அல்லது சம்பிரதாய வைபவங்கள்
- சுத்திகரிக்கப்படாத மருத்துவ, பல் அல்லது ஊசிகுத்து வைத்திய ஊசிகளுடன் தோலைத் துளைக்கும் செயல்முறைகள்.
குறைந்தளவு அபாயமுள்ள செயல்முறைகள்
- கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவவேளையில் ‘ஈரல் அழற்சி ‘சி’’யுடனான ஒரு தாய் தனது பிள்ளைக்கு அதனைக் கொடுக்கலாம்.
- பல் துலக்கிகள் அல்லது சவரக்கத்திகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
- சுகாதார பராமரிப்புப் பணியாளர்களுக்குத் தற்செயலாக ஏற்படும் ஊசிக்குத்துக் காயங்கள்
பின்வருவனவற்றால் உங்களுக்கு ‘ஈரல் அழற்சி ‘சி’’ ஏற்பட முடியாது:
- கழிவறை அல்லது குளியலைப் பகிர்ந்துகொள்வதால்
- ‘ஈரல் அழற்சி ‘சி’’உள்ள ஒருவரின் வியர்வை அல்லது துணிகளைத் துவைத்தல்
- முள்கரண்டி, உணவுத் தட்டுக்கள் அல்லது கோப்பைகள் மற்றும் குவளைகளைப் பகிர்தல்
- ‘ஈரல் அழற்சி ‘சி’’உள்ள ஒருவரால் சமைக்கப்பட்ட உணவை உண்ணல்
- தும்மல், இருமல், முத்தமிடல் அல்லது கட்டியணைத்தல்
- நீச்சல் தடாகங்கள்
- மிருகம் அல்லது பூச்சிக்கடிகள் (உ+ம்: நுளம்புகள்)
எல்லாவித விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும்போது தடுப்புமருந்துகள், இரத்தம் ஏற்றுதல், மருத்துவ மற்றும் பல்வைத்திய நடைமுறைகள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பானவையாகும்.
எனக்கு ‘ஈரல் அழற்சி ‘சி’’ உள்ளதாவென எனக்கு எப்படித் தெரியும்?
அநேகமானோர் நோயாளியாகத் தோற்றமளிக்கவோ அல்லது உணரவோ மாட்டார்கள். மிகவும் பொதுவான நோய் அறிகுறி குமட்டல் ஏற்படுவதாகும். நிச்சயமாகத் தெரிந்துகொள்வதற்கான ஒரே வழி இரத்தப் பரிசோதனை செய்துகொள்வதாகும்.
எப்போது நான் பரிசோதிக்கப்பட வேண்டும்?
பின் வரும் தருணங்களில் பரிசோதனை வேண்டுமென உங்கள் வைத்தியரைக் கேளுங்கள்:
- போதைவஸ்துவை எப்போதாவது ஒருமுறையோ அல்லது நீண்டகாலத்திற்கு முன்னரோ ( உடற்பயிற்சிக்கான ஊக்க மருந்துகளும் போதைவஸ்துக்குள் அடங்கும் ) எடுத்திருந்தால்
- எப்போதாவது எந்தவொரு நாட்டிலாவது நீங்கள் சிறைச்சாலையில் இருந்திருந்தால்
- 1990 க்குமுன் அவுஸ்திரேலியாவில் உறுப்பு மாற்றுச் சிகிச்சை அல்லது இரத்தப்பரிமாற்றம் அல்லது வேறெந்த நாட்டிலாவது ‘ஈரல் அழற்சி ‘சி’’-க்கான பரிசோதனையை அவர்கள் ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் செய்துகொண்டிருந்தால்
- நீங்கள் பச்சை ஏதும் குத்திக் கொண்டிருந்தால் (tattoos) அல்லது தோலைத் துளையைச் செய்துகொண்டிருந்தால்
- ஆபிரிக்கா, மத்திய கிழக்கு(குறிப்பாக (எகிப்து), மத்திய தரை, கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஆசியா போன்ற ‘ஈரல் அழற்சி ‘சி’’-யுடன் பெருமளவு மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து நீங்கள் வருவீர்களானால்
- ‘ஈரல் அழற்சி ‘சி’’உங்கள் தாயாருக்கு இருக்குமேயானால்
- நீங்கள், ‘எச் ஐ வி’ உள்ள, மற்றும் ஆண்களுடன் பாலுறவு கொள்ளும் ஒரு மனிதரானால்
- உங்கள் பாலுறவுப் பங்காளிக்கு ‘ஈரல் அழற்சி ‘சி’’ இருக்குமானால்
எனது உடலை ‘ஈரல் அழற்சி ‘சி’’ வைரஸ்கிருமி எப்படிப் பாதிக்கிறது?
‘ஈரல் அழற்சி ‘சி’’வைரஸ் ஈரல் கலன்களுக்குள் புகுந்து அதனுள்ளே அதிக வைரசுக்களை உருவாக்குகிறது. ஈரல் கலன்களிலுள்ள இந்த வைரசுக்களுடன் உடல் சண்டையிடுவது ஈரலைப் பாதிக்கலாம். சில வேளைகளில் எல்லா வைரசுக்களையும் உங்கள் உடல் சண்டையிட்டு தானாகவே மடியச் செய்யலாம். உங்களுக்கு இந்த வைரஸ் வந்து 6 மாதங்களுக்குள் இது நடக்கலாம்.
எல்லா வைரசுக்களையும் அநேகமானோரின் உடலால் சண்டையிட்டு அழிக்க முடியாது. பல ஆண்டுகளாக, பெருமளவு கண்டல் அடையாளங்களுடன் ரஈல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இது ‘ ஈரலரிப்பு’ என அழைக்கப்படுகிறது, மற்றும் ஈரல் புற்றுநோய் மற்றும் ஈரல் இயங்காமைக்கு இது இட்டுச்செல்லக்கூடும்.
‘ஈரல் அழற்சி ‘சி’’-க்குச் சிகிச்சையளிக்க அல்லது இதைக் குணப்படுத்த முடியுமா?
ஆம். ‘ஈரல் அழற்சி ‘சி’’யைக் குணப்படுத்துவதற்கான மருந்தை உங்கள் வைத்தியரால் உங்களுக்குத் தர இயலும்.
எனக்கு ‘ஈரல் அழற்சி ‘சி’’ இருந்தால் அதை நான் யாரிடமாவது சொல்ல வேண்டுமா?
சட்டத்தின் பிரகாரம் பின்வருவோருக்கு நீங்கள் சொல்ல வேண்டும்:
- இரத்த வங்கியில் நீங்கள் இரத்தம் கொடுத்தால்
- உடலுறுப்பை ( உ+ம்: சிறுநீரகம்) அல்லது வேறு உடல் திரவங்களை நீங்கள் கொடுத்தால்(உ+ம்: விந்து)
- உங்களுக்கு ஈரல் அழற்சி அல்லது வேறு வியாதிகளிருந்தால் அவற்றைச் சொல்லும்படி சில காப்புறுதி நிறுவனங்கள் கேட்கும். நீங்கள் அவர்களுக்கு அதைச் சொல்லாதுவிட்டால், நீங்கள் ஒரு கோரிக்கையை விடுக்கும்போது அவர்கள் பணம் தராமல் போகக்கூடும்.
- நீங்கள் அவுஸ்திரேலிய இராணுவப் படையில் (ADF) சேர விரும்பினால், நீங்கள் அவர்களுக்குச் சொல்லவேண்டும்.
- நீங்கள் உங்கள் கைகளைப் பார்க்கமுடியாத வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சுகாதாரப் பணியாளரானால் ( அறுவைவைத்தியர் அல்லது பல்வைத்தியர் போன்றோர்), உங்களுக்கு வேலை தருவோருக்கு அல்லது உங்களுடைய மேற்பார்வையாளருக்கு இதைச் சொல்வதுடன் ஒரு சிறப்பு வைத்தியரிடமிருந்து நீங்கள் ஆலோசனை பெறவேண்டும்.
நீங்கள் உங்கள் பின்வருவோருக்குச் சொல்லவேண்டியதில்லை:
- உங்களுடைய முதலாளி
- சக வேலையாள் அல்லது சக மாணவர்
- குடும்பம்
- நண்பர்கள்
உங்கள் வைத்தியர் உங்கள் குடும்பத்திற்குச் சொல்ல முடியாது.
‘ஈரல் அழற்சி ‘சி’’ வராமல் எவ்வாறு நான் தவிர்க்கலாம்?
- மருந்தை ஏற்றுவதற்கான மருந்தூசிகள், ஊசிகள் அல்லது கரண்டிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்
- பச்சை குத்தும் அல்லது உடல் துளைகளைச் செய்யும் கலைக்கூடங்களைக் கவனமாகத் தெரிவுசெய்யவும். உரிமம் பெற்ற தொழிலாளர்களைப் பாவியுங்கள். அவர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் புதிய ஊசி, மை உபயோகிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- ஒன்றிற்கும் மேற்பட்ட பாலுறவுப் பங்காளிகளை நீங்கள் வைத்திருந்தால், குறிப்பாக நீங்கள் ஆண்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் ஒரு மனிதரானால் எப்போதும் ஒர் ஆணுறையைப் பாவியுங்கள்.
- இரத்த தானத்தைப் பரிசோதிக்காத நாடுகளில் இரத்தத்தையும், இரத்த உற்பத்திப் பொருட்களையும் தவிர்க்கவும்
- பல் துலக்கிகளையோ அல்லது சவரக்கத்திகளையோ பகிர்ந்துகொள்ள வேண்டாம்
- நீங்கள் ஒரு சுகாதாரப் பராமரிப்பு உத்தியோகத்தரானால், எப்பொழுதும் தரமான முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றவும்
கடந்தகாலத்தில் ‘ஈரல் அழற்சி ‘சி’’ உங்களுக்கு ஏற்பட்டு, அதற்காக மருந்து எடுத்திருந்தாலும்கூட நீங்கள் மீண்டும் ‘ஈரல் அழற்சி ‘சி’’ யால் பீடிக்கப்படலாம்.
உதவியையும், ஆலோசனையினையும் எங்கே நான் பெறமுடியும்?
உங்களுக்கு உதவி, ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கும் பல ‘ஈரல் அழற்சி ‘சி’’ குழுக்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றன.