சிபிலிஸ் (syphilis) என்றால் என்ன?

சிபிலிஸ் என்பது ட்ரெபோனீமா பலிடம் என்று அழைக்கப்படும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய பாலுறவால் பரவும் நோய்த்தொற்று ஆகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிபிலிஸ் ஏற்படலாம்.


எனக்கு சிபிலிஸ் (syphilis) எப்படி ஏற்படுகிறது?


உங்களுக்கு பின்வரும் வழிகளில் சிபிலிஸ் ஏற்படலாம்:

• ஒருவரின் சிபிலிஸ் புண் அல்லது சொறி கண்ட இடத்தைத் தொடுவதால் ஏற்படும். புண் அல்லது சொறி கண்ட இடம் எளிதாக கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் கூட இவைகளைத் தொடுவதால் தொற்று ஏற்படும்.

• ஆணுறை பயன்படுத்தாமல் வாய்வழி, பெண்ணுறுப்பு வழி அல்லது குதம் வழி உடலுறவு கொள்ளும்போது ஏற்படும்.

• நோய் தொற்றிய இரத்தத்துடன் தொடர்பு ஏற்படும்போது ஏற்படும்.

• கர்ப்பிணிப் பெண்கள் சிபிலிஸ் தொற்றை தங்கள் குழந்தைகளுக்குத் தரக்கூடும்.

சிபிலிசும் (syphilis) குழந்தைகளும் (பிறவி சிபிலிஸ்)


ஒரு கர்ப்பிணிப் பெண் இரத்தம்மூலம் தனது குழந்தைக்கு சிபிலிசை தரக்கூடும். இதனால் சில வேளைகளில் குழந்தை இறந்து பிறக்கலாம் அல்லது சேதமடையலாம். இது பிறவி சிபிலிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் ஏற்படுவது அரிது.

பெரும்பாலும் சிபிலிஸ் அறிகுறிகளின்றியே குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் பிறந்தபின் அவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

எனக்கு சிபிலிஸ் (syphilis) இருக்கிறதா என்று எனக்கு எப்படித் தெரியும்?


அதிகமான மக்களுக்கு சிபிலிஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால் பெரும்பாலும் அவர்கள் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருப்பதாகவே உணர்வார்கள்.

உங்களுக்கு சிபிலிஸ் உள்ளதா என்பதை இரத்தப் பரிசோதனை மட்டுமே உறுதிசெய்யும்.

பெண்கள் தாங்கள் கர்ப்பமான முதல் 12 வாரங்களில் சிபிலிஸ் சோதனையை செய்யவேண்டும். அல்லது, அவர்கள் மருத்துவரிடம் முதன்முதலாக செல்லும்போதே இந்த சோதனையைச் செய்யலாம். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் பிந்தைய நாட்களில் இந்த சிபிலிஸ் சோதனை மீண்டும் செய்யப்படலாம்.

எனக்கு சிபிலிஸ் (syphilis) உள்ளது என்றால் நான் என்ன செய்வது?


• சிபிலிஸ் வுக்கான சிகிச்சை முடியும்வரை ஆணுறை உபயோகப்படுத்தியும்கூட நீங்கள் யாருடனும் உடலுறவு கொள்ளாதீர்கள்.
• உங்களுக்கு சிபிலிஸ் உள்ளது என்றால் நீங்கள் உடலுறவு கொள்கின்றவரிடம் அல்லது உடலுறவு கொள்கின்றவர்களிடம் உங்களுக்கு சிபிலிஸ் இருப்பதைக் கூறுங்கள். அப்போது அவர்களும் சிபிலிசுக்கான பரிசோதனையை செய்துகொள்ளலாம்.
• உங்களுக்கு சிபிலிஸ் இருப்பதை யாரிடம் கூறவேண்டும் என்பதை முடிவு செய்ய உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார். அவர்களிடம் நீங்கள் கூறவும் உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.

சிபிலிசு(syphilis) க்கு சிகிச்சைதர முடியுமா அல்லது குணப்படுத்த முடியுமா?


• ஆம். தொடர் ஊசி மூலம் சிபிலிசுக்கு சிகிச்சை அளிக்க அல்லது குணப்படுத்த முடியும். ஒருவருக்கு சிபிலிஸ் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து சிகிச்சைக்கான காலஅளவு அமையும். மருத்துவருடனான ஒவ்வொரு சந்திப்பிற்கும் நீங்கள் செல்வதை உறுதிப்படுத்துங்கள்.

• நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த சிபிலிஸ்க்கான சிகிச்சை முடிந்தபிறகு நீங்கள் மற்றொரு சோதனை வேண்டும்.

• கர்ப்பமான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிபிலிஸ் வருவதைத் தடுக்க கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே சிபிலிசுக்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

• கடந்தகாலத்தில் சிபிலிஸ் நோயிலிருந்து நீங்கள் குணமடைந்திருந்தாலும் உங்களுக்கு மீண்டும் சிபிலிஸ் வரலாம்.

சிபிலிஸ் (syphilis) வருவதிலிரிருந்து நான் எப்படி என்னை பாதுகாக்க முடியும்?


• நீங்களும், நீங்கள் உடலுறவு வைத்திருப்பவரும் சிபிலிஸ் குறித்த பரிசோதனையை செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கும் மேற்பட்டவருடன் உடலுறவு வைத்திருந்தால் அல்லது நீங்கள் உடலுறவு வைத்திருப்பவர் பிறருடன் உடலுறவு கொள்கின்றவர் என்றால் நீங்கள் தொடர்ந்து இந்த சோதனையைச் செய்யுங்கள். நீங்கள் அதிகமானவர்களுடன் உடலுறவு வைத்திருப்பவரெனில், சிபிலிஸ் ஏற்படும் அபாயம் உங்களுக்கு அதிகரிக்கிறது.

• நீங்களும் நீங்கள் உடலுறவு கொள்கின்றவரும் சிபிலிசுக்கு சிகிச்சைபெறுங்கள். அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கொருவர் அல்லது மற்றவர்களுக்கு சிபிலிசை தொடர்ந்தும் தரமாட்டீர்கள்.

• நீங்கள் மற்றவர்களுடன் உடலுறவு கொள்கின்றவரெனில் நீங்கள் நீண்டகாலமாக உடலுறவு வைத்திருப்பவருடனும் யோனி, குதம் அல்லது வாய்வழி உடலுறவுகொள்ளும்போது ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்.

• புதிய நபரிடம் உடலுறவு கொள்ளும்முன்பு ஆணுறைகளைப் பயன்படுத்துவது குறித்து அந்த நபரிடம் பேசுங்கள்.

• சிபிலிஸ் சிகிச்சை பெறும் ஒருவருடன் அந்த சிகிச்சை முடியும்வரை ஆணுறை அணிந்தும்கூட உடலுறவு கொள்ளாதீர்கள்.

பிறருக்கு சிபிலிஸ் (syphilis) நோய்த்தொற்றை நான் தருவதில்லை என்பதை நான் எப்படி உறுதி செய்ய முடியும்?


• உங்கள் சிகிச்சை முடிவடையும் வரை யாருடனும், ஆணுறை அணிந்தும்கூட உடலுறவு கொள்ளாதீர்கள்.

• நீங்கள் ஒருவருக்கும் மேற்பட்டவருடன் உடலுறவு வைத்திருந்தால் அல்லது நீங்கள் உடலுறவு வைத்திருப்பவர் பிறருடன் உடலுறவு கொள்கின்றவர் என்றால் நீங்கள் தொடர்ந்து சிபிலிஸ் குறித்த சோதனையைச் செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் சிபிலிஸ் வரலாம்.

இதுகுறித்த உதவி மற்றும் ஆலோசனையை நான் எங்கிருந்து பெற முடியும்?


நீங்கள் இவர்களிடமிருந்து உதவி பெறலாம்:

• மருத்துவர்
• பாலியல் சுகாதார மருத்துவமனை
• சமூக சுகாதார சேவைகள்
• குடும்ப திட்டமிடல் மையங்கள்

மேலதிகத் தகவல்கள்