‘எஸ்டிஐ’ என்றால் என்ன:

STI (எஸ்டிஐ) எனும் முதலெழுத்துக்கள் குறிப்பிடுவது பாலுறவால் (Sexually)  பரவக்கூடிய (Transmissible) தொற்றுக்கள்  (Infections) என்பதாகும்.

நீங்கள் பாலுறவு கொள்ளும்போது உங்களைப் பீடிக்கக்கூடிய வருத்தம் ‘எஸ்டிஐ’- களாகும்.


ஒரு ‘எஸ்டிஐ’ -யினை நான் எவ்வாறு பெறுவேன்?


தோலில், இரத்தத்தில் அல்லது விந்து, பெண்ணுறுப்புத் திரவம் போன்ற பாலுறவு சுரப்புநீரில் ‘எஸ்டிஐ’ கிருமி வாழ்கிறது.

பாலுறவால் (பெண்ணுறுப்பு, மலவாசல் அல்லது வாய்வழி பாலுறவால்) அல்லது பிறப்புறுப்பைத் தொடுவதால் ‘எஸ்டிஐ’ உங்களுக்கு வரும்.

நீங்கள் ஆணுறையொன்றினைப் பாவிக்காதுவிட்டால் உங்களுக்கு ‘எஸ்டிஐ’ வரலாம்.

உடலுக்கு ‘எஸ்டிஐ’-கள் எதனைச் செய்கின்றன?


பெண்களுக்கு ‘எஸ்டிஐ’ க்கள் உண்டுபண்ணக்கூடியவை:

 • மோசமான வயிற்றுவலி
 • பெண்ணுறுப்பிலிருந்து கசிவு
 • பெண்ணுறுப்பு அருகில் புள்ளிகள்
 • கருவறைக்கு வெளியில் சிசு வளர்தல்
 • மிகவும் ஆரம்ப நிலையிலேயே பெண்ணொருத்தி தனது குழந்தையைப் பிரசவித்தல் (கருச்சிதைவு)
 • குழந்தை மிகவும் நோய்வாய்ப்படல்

ஆண்களுக்கு ‘எஸ்டிஐ’ கள் செய்யக்கூடியவை:

 • மனிதனுக்குக் குழந்தைகள் கிடைப்பது நின்றுவிடும்
 • ஆணுறுப்பிலிருந்து கசிவு
 • ஆணுறுப்பில் புள்ளிகள் வரும்
 • நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிவுடனான வலி உருவாகும்

எனக்கு ‘எஸ்டிஐ’ இருக்கிறதாவென எப்படி எனக்குத் தெரியும்?


தங்களுக்கு ‘எஸ்டிஐ’  இருப்பது பலருக்குத் தெரியாது, ஏனெனில் அவர்கள் நன்றாக இருப்பதாகத் தோற்றமளிப்பதுடன் நோய்க்கான அடையாளமோ அல்லது நோய் அறிகுறியோ இருக்காது. ஒரு சோதனையை மேற்கொள்வதுதான் நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான ஒரேயொரு வழியாகும். வேறுபட்ட ‘எஸ்டிஐ’  களுக்கு வேறுபட்ட சோதனைகள் உண்டு. அந்தச் சோதனைகளாவன:

 • உங்கள் சிறுநீர் சோதிக்கப்படுவது
 • உங்கள் இரத்தம் சோதிக்கப்படுவது
 • தொற்றுக்கள் உள்ளனவா என்று பார்க்க உங்கள் பிறப்புறுப்புக்களில் இருந்து சிறிது கசிவு துடைத்தெடுக்கப்படுவது

ஒரே ஒரு பரிசோதனை அல்லது அனைத்து மூன்று பரிசோதனைகளையும் நீங்கள் மேற்கொள்ளவேண்டி வரலாம்.  எந்தப் பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ளவேண்டுமென உங்கள் வைத்தியர் உங்களுக்குக் கூறுவார்.

‘எஸ்டிஐ’ களுக்குப் பரிகாரம் செய்யலாமா அல்லது அவற்றைக் குணமாக்க முடியுமா?


சில ‘எஸ்டிஐ’ – களை விரைவாகவும், சுலபமாகவும் மருந்தால் மாற்றலாம்.  சிலவற்றுக்குச் சிகிச்சையுண்டு ஆனால் குணப்படுத்த முடியாது.

மருந்து முடிந்தபின்னர் அல்லது ‘எஸ்டிஐ’  சுகமடைந்த பின்னர்கூட ‘எஸ்டிஐ’ உங்களுக்கு மீண்டும் வரலாம்.

எப்போது நான் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?


‘எஸ்டிஐ’ சோதனையை நீங்கள் செய்யவேண்டி வருவது:

 • ஆணுறையின்றி நீங்கள் பாலுறவு கொண்டால்(பெண்ணுறுப்பு, வாய்வழி அல்லது மலவாசல் பாலுறவு உட்பட)
 • நோய் அறிகுறிகள் ஏதாவது இருப்பின்
 • உங்களுடைய பாலியல் ஆரோக்கியம் பற்றி நீங்கள் கவலை கொண்டால்
 • உங்களுக்கு ‘எஸ்டிஐ’ இருக்கக்கூடுமென நீங்கள் நினைத்தால்
 • பாலுறவின்போது ஆணுறை கிழிந்தால் அல்லது கழன்று விழுந்தால்
 • இன்னொருவருடன் நீங்களோ அல்லது உங்கள் பங்காளியோ பாலுறவு கொண்டால்
 • கடந்தகாலத்தில் நீங்களோ அல்லது உங்கள் பங்காளியோ வேறு ஆட்களுடன் பாலுறவு கொண்டிருந்தால்
 • போதைப்பொருளை உட்செலுத்தும் மருந்தூசி, ஊசி, கரண்டிகளை நீங்கள் பகிர்ந்துகொண்டால்
 • நீங்கள் ஒரு புதிய பாலுறவை ஆரம்பித்தால்

‘எஸ்டிஐ’ பரிசோதனை என்றால் என்ன?


இச் சோதனைகள் விரைவானவை, வலியற்றவை மற்றும் வழக்கமாக இலவசமானவை.  ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தப் பரிசோதனைகள் வித்தியாசமானவை.  உடல் திரவங்களை, உதாரணமாகச் சிறுநீர்(மூத்திரம்), எச்சில் (துப்பல்), பெண்ணுறுப்பு திரவம், அல்லது இரத்தத்தின் ஒரு சிறிய அளவை ஒரு மருத்துவர் அல்லது தாதி எடுப்பார்.  சில சோதனைகளை நீங்களாகவே செய்துகொள்ளலாம்.

சோதனைப் பெறுபேறுகளைப்பெற 1 அல்லது 2 வாரங்கள் எடுக்கும்.

எனது சோதனை ‘நேர்திசை’ஆனது. நான் என்ன செய்யலாம்?


சோதனை’நேர்திசை’ என்பதன் அர்த்தம் உங்களுக்கு ‘எஸ்டிஐ’ இருக்கிறது என்பதாகும்.  விரைவாகவும், சுலபமாகவும் பாவிக்கக்கூடிய மருந்தை வைத்தியர் உங்களுக்குக் கொடுப்பார்.

சில ‘எஸ்டிஐ’  களுக்குச் சிகிச்சை செய்யலாம்; ஆனால் குணப்படுத்த முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.

எனக்கு ‘எஸ்டிஐ’ இருக்கிறதென வேறு யாருக்காவது நான் சொல்ல வேண்டுமா?


நீங்கள் உங்கள் பாலியல் பங்காளிக்குச் சொல்ல வேண்டும் மற்றும் உங்கள் பாலியல் பங்காளியும் ஒரு பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.  உங்கள் பாலியல் பங்காளி பரிசோதிக்கப்படாமலும், மருந்தெடுக்காமலும் இருந்தால், நீங்கள் தொடர்ந்தும் ‘எஸ்டிஐ’  யினை ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடும்.

உங்கள் பாலுறவுப் பங்காளிக்குச் சொல்ல முடியாவிட்டால், அவர்களுக்குச் சொல்லுமாறு உங்கள் வைத்தியர் அல்லது மருத்துவத் தாதியிடம் கேட்கவும்.  உங்களைப் பற்றி உங்கள் பாலியல் பங்காளிக்கு அவர்கள் சொல்ல மாட்டார்கள்.  உங்களுடைய பாலியல் பங்காளியைக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை ‘ தொடர்பு அறிதல்’ (‘contact tracing’) எனப்படும்.

நீங்கள் பின்வருவோருக்குச் சொல்லவேண்டிய தேவையில்லை; உங்கள்:

 • முதலாளி
 • சக தொழிலாளர்கள்
 • நண்பர்கள்
 • குடும்பம்

ஒரு ‘எஸ்டிஐ’ யை நான் வேறொருவருக்குக் கொடுக்கவில்லையென்பதை எவ்வாறு உறுதிப்படுத்தமுடியும்?


 • நீங்களும் உங்கள் பாலுறவுப் பங்காளியும் மருந்தை முடிக்கும் வரை பாலுறவு கொள்ள வேண்டாம்
 • ஒரு ஆணுறையைப் பாவிக்கவும்

‘எஸ்டிஐ’ எனக்கு வருவதை எவ்வாறு நான் தவிர்க்கலாம்?


பாலுறவு கொள்ளும் ஒவ்வொரு தடவையும் ஒரு ஆணுறையைப் பாவிப்பதுதான் ‘எஸ்டிஐ’  யினை நீங்கள் தவிர்ப்பதற்கான சிறந்த ஒரே வழியாகும்.

மேலதிகத் தகவல்கள்